கோவை தனியார் மருத்துவமனையில் முதல்முறையாக இதய மாற்று அறுவைச் சிகிச்சை

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் முதல்முறை யாக இதய மாற்று அறுவைச் சிகிச்சையை மருத்துவர்கள் வெற் றிகரமாக திங்கள்கிழமை செய்து முடித்தனர்.

தமிழகத்தில் சென்னையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட இதய மாற்று அறுவைச் சிகிச்சை தற் போது கோவையிலும் மேற்கொள் ளப்பட்டுள்ளது. கே.எம்.சி. மருத்துவமனையின் தலைவரும் மருத்துவருமான நல்லா பழனி சாமி செய்தியாளர்களிடம் திங்கள் கிழமை கூறியது:

இதயம் பம்ப் செய்யக் கூடிய ஆற்றலை இழந்துவிட்டால் இதய மாற்று அறுவைச் சிகிச்சை மட்டுமே தீர்வு. இவ்வாறான நிலை யில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த 24 வயது ஏழை நோயாளி, கே.எம்.சி. மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, இதய மாற்று அறுவைச்சிகிச்சை செய்தால் மட்டுமே காப்பாற்றக் கூடிய நிலை இருந்தது. இதையடுத்து, விபத்தில் மூளைச் சாவு அடைந்த 37 வயதுடைய வரின் இதயம் தானமாக, கடந்த 9-ம் தேதி பெறப்பட்டது. அந்த இத யத்தை, பாதிக்கப்பட்ட இளைஞ ருக்கு பொருத்துவதற்கான அறு வைச்சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய பிரபல இதய மருத்துவ நிபுணர் பிராசந்த் வைஜெயனாத் தலைமை யிலான மருத்துவ நிபுணர்கள் குழு அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்டது. சுமார் 3 மணி நேர அறுவைச் சிகிச்சைக்குப் பின் னர் வெற்றிகரமாக இதயம் பொருத்தப்பட்டது.

சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சைக்கு அடுத்த படியாக இதய மாற்று அறுவைச் சிகிச்சை கோவையில் முதல் முறை யாக வெற்றிகரமாக மேற்கொள் ளப்பட்டுள்ளது ஒரு மைல்கல் சாதனை என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE