புதுடெல்லி: போக்குவரத்து துறை நியமன முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் செந்தில் பாலாஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011 முதல் 2015 வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், 3 வழக்குகளை பதிவு செய்தனர்.இந்த வழக்குகள் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், இந்த மோசடியில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப்பிரிவு கடந்த 2021-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த சம்மனை எதிர்த்து செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ,மாநில போலீஸார் தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ள நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கப்பிரிவு கேட்ட ஆவணங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.
» இசையமைப்பாளர் டிஎஸ்பி உடன் ரகசிய திருமணமா? - நடிகை பூஜிதா மறுப்பு
» சீரான விநியோகம் இல்லாததால் சென்னையில் 2-வது நாளாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் எனத் தகவல் வெளியானது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக அமலக்கத்துறை மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி செந்தில் பாலாஜி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago