திமுகவில் உதயநிதியும், துரை தயாநிதியும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா என மதுரையில் நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு திமுகவில் தனது ஆதரவாளர்கள் மூலம் பலத்தை காட்ட முயன்ற முன்னாள் மத்தியஅமைச்சர் மு.க.அழகிரி, தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வர் ஆனபிறகு தற்போது அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கியிருக்கிறார்.
தற்போது, அவர் தனது, ஆதரவாளர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் மட்டும் தவறாமல் பங்கேற்று வருகிறார்.
மதுரை மாநகராட்சி முன்னாள் மண்டலத் தலைவராக இருந்தவர் இசக்கிமுத்து. மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரான இவர் உடல்நலக் குறைவால் வீட்டில் இருந்தபடியே மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை புதூர் அருகே கொடிக்குளத்தில் உள்ள இசக்கிமுத்துவின் வீட்டுக்கு நேற்று காலை மு.க.அழகிரி சென்றார்.
» மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன்: ரவீந்திரநாத் எம்.பி.
» மழையால் பயன்படுத்தவே முடியாத நிலையில் மதுரை சாலைகள்: தண்ணீரில் தத்தளிக்கும் வாகன ஓட்டிகள்
அங்கு இசக்கிமுத்துவிடம் நலம் விசாரித்த அழகிரி, அவரது மருத்துவச் செலவுக்கு நிதியுதவி அளித்தார். முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், எம்எல்.ராஜ்உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது செய்தியாளர்கள், திமுகவில் உதயநிதியும், துரை தயாநிதியும் இணைந்து செயல்படுவார்களா?, நீங்கள் தீவிர அரசியலில் மீண்டும் இறங்குவீர்களா? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால், அழகிரி பதில் அளிக்காமல் சென்று விட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago