சென்னையில் செப்.9-ல் விழா: இசைக் கலைஞர்களுக்கு கல்கி அறக்கட்டளை விருது

By செய்திப்பிரிவு

சென்னை: கர்னாடக இசைப் பாடகி ஐஸ்வர்யா வித்யா ரகுநாத், கடம் வித்வான் சந்திரசேகர சர்மா ஆகியோருக்கு கல்கி நினைவு அறக்கட்டளை விருது வழங்கப்பட உள்ளது. சென்னை மயிலாப்பூரில் வரும் 9-ம் தேதி நடக்கும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதுதொடர்பாக கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது விழா, சென்னை மயிலாப்பூர் ராகசுதா அரங்கில் வரும் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

மேடை நாடக நிபுணரும், குரல் வல்லுநருமான பி.ஸி.ராமகிருஷ்ணா தலைமையில் நடக்கும் இந்த விழாவில், கர்னாடக இசைப் பாடகி ஐஸ்வர்யா வித்யா ரகுநாத், கடம் வித்வான் சந்திரசேகர சர்மா ஆகியோருக்கு விருது வழங்கப்பட இருக்கிறது.

விருது நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா வித்யா ரகுநாத் (பாட்டு), ஸாயி ரக்‌ஷித் (வயலின்), டெல்லி சாய்ராம் (மிருதங்கம்), சந்திரசேகர சர்மா (கடம்) பங்கேற்கும் இன்னிசைக் கச்சேரி நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்