மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள்?- கட்டமைப்பு வசதியை அதிகரிக்க மத்திய அரசு ரூ. 8 கோடி ஒதுக்கீடு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டு முதல் கூடுதலாக 100 எம்பிபிஎஸ் சீட் அதிகரிக்கப்படுகிறது. இதற்கான கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க மத்திய அரசு ரூ. 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த கல்வி ஆண்டு வரை, 155 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்த கல்வி ஆண்டு முதல் 100 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க, மருத்துவமனை நிர்வாகம் தீவிர முயற்சி செய்தது.

மத்திய அரசும் அதற்கு ஒப்புதல் அளிக்க தயாராக இருந்ததால், கூடுதலாக 100 இடங்களை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உறுதி செய்ய, இந்திய மருத்துவக் கவுன்சில் குழு எந்த நேரத்திலும் மதுரை மருத்துவக் கல்லூரி ஆய்வுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. மருத்துவமனை பவள விழாவில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரும், நடப்பு கல்வி ஆண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதி அளித்தார். ஆனால், கடைசி வரை இந்திய மருத்துவக் கவுன்சில் மருத்துவக் கல்லூரி ஆய்வுக்கு வரவில்லை.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் 5 இடங்கள் குறைக்கப்பட்டு 150 இடங்களுக்கே மாணவர் சேர்க்கை நடந்தது. அதனால், மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. ஆனாலும், 100 இடங்களை அதிகரிப்பதற்கான முயற்சியை மருத்துவமனை நிர்வாகம் கைவிடவில்லை.

தற்போது மத்திய அரசு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் அடுத்த கல்வி ஆண்டு முதல் 100 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க முதற்கட்டமாக ரூ. 7.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் நோயாளிகள் வருகையில் மதுரை அரசு மருத்து வமனை முதலிடத்தில் இருக்கிறது. அதிகமான அறுவை சிகிச்சைகள், உயர்ரக உயிர் காக்கும் சிகிச்சைகள் நடக்கின்றன.

250 எம்பிபிஸ் இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்துவ தற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மதுரை மருத்துவக் கல்லூரியில் இருக்கிறது. இதை உறுதி செய்ய இந்திய மருத்துவக் கவுன்சில் விரைவில் ஆய்வுநடத்த வர உள்ளது. அவர்கள் வருவதற்கு முன், மருத்துவக் கல்லூரியை ஆய்வுக்கு முழுமையாக தயா ர்படுத்துவதற்கான பணிகள் நடக்கிறது. தற்போது மத்திய அரசு கல்லூரியின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க ரூ.7.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால், அடுத்த கல்வி ஆண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க அதிகபட்ச வாய்ப்புள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்