முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் சிறுமி சிகிச்சைக்கு பின் வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: அரிய வகை முகைச் சிதைவு நோயால் 6 வருடங்களாக பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி தான்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் தனியார் மருத்துவமனையில் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை தான்யா டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ், இவரது மனைவி சவுபாக்கயம். இவர்களுக்கு 9 வயதில் தான்யா என்ற மகள் உள்ளார். சிறுமி Hemifacial atrophy என்கிற அறியவகை முகச்சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும் வழக்கமான குழந்தை போலவே அவரது செயல்பாடுகள் இருந்து வந்தது.

இதனை முதலில் சாதாரண ரத்தக்கட்டு என நினைத்த பெற்றோர்கள் கடந்த 2017-ம் ஆண்டு முதல் எழும்பூரில் உள்ள குழந்தைகள்நல மருத்துவமனை உட்பட 6-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் அந்த பாதிப்பு குறையவில்லை. நாட்கள் போக போக தான்யாவின் முகம் வலது கண்ணம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதைவு ஏற்பட தொடங்கியுள்ளது. இதனால் குழந்தையின் அழகிய முகம் மிகவும் பாதிப்படைந்தது.

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு உதவிக்கரம் நீட்டுமாறு முதலமைச்சருக்கு சிறுமி தான்யா கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சிறுமிக்கு உடனடியாக சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் சவிதா மருத்துவ கல்லூரி மருத்துவமனை தானாக முன் வந்து இலவசமாக சிறுமிக்கு சிகிச்சையளிப்பதாக தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 23-ம் தேதி சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடத்தபட்டது. 10 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு 8 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை சிறுமிக்கு அளிக்கப்பட்டு முகசீரமைப்பு செய்யப்பட்டது.

தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சம்பந்தப்பட்ட அந்தமருத்துவமனையில் சிறுமி தானியவை சந்தித்து நலம் விசாரித்த நிலையில், சிறுமி தற்போது நலமுடன் இருப்பதாகவும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தானியாவின் முகம் சீரமைக்கப்பட்ட நிலையில் அவரது புகைப்படத்தையும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது மேலும் வரும் வெள்ளிக்கிழமை தானிய டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாகவும் மருத்துமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்