தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 35-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சென்னை மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏ த.வேலு, சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமார் உடனிருந்தனர்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா தடுப்பூசிப் பணியை ஓர் இயக்கமாகவே முதல்வர் ஸ்டாலின் மாற்றியுள்ளார்.
தமிழகத்தில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 6 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள். அவர்களில் 95.88 சதவீதத்தினருக்கு முதல் தவணையும், 88.77 சதவீதத்தினருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
மேலும், சுகாதாரம், முன்களப் பணியாளர்கள் மற்றும் இரு தவணை செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி, அரசு மையங்களில் இலவசமாகப் போடப்படுகிறது. 18 முதல் 59 வயதுள்ளவர்கள் பூஸ்டர் தவணை தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி போட்டுக்கொள்ளும் நிலை இருந்தது. அதனால், குறைந்த எண்ணிக்கையிலானவர்களே பூஸ்டர் தவணை தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, 18 முதல் 59 வயதுள்ளவர்களுக்கு அரசு மையங்களில் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
வரும் 30-ம் தேதியுடன் இலவச பூஸ்டர் தவணை தடுப்பூசி திட்டம் நிறைவடைகிறது. அதன்பின், 18 முதல் 59 வயதுள்ளவர்கள், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் இன்னும் 26 லட்சத்து 9,612 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 86 லட்சத்து 77,762 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக்கொள்ளவில்லை. அதேபோல, 3 கோடியே 53 லட்சத்து 72,341 பேர் பூஸ்டர் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தகுதியுடைவர்கள். வரும் 11, 18, 25-ம் தேதிகளில் நடைபெற உள்ள மெகா முகாம்களில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இதுவரை 14.88 சதவீதம் பேர் பூஸ்டர் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். இனியும் தாமதமின்றி பூஸ்டர் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலும் சுகப்பிரசவமும், தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் சிசேரியனும் நடைபெறுகிறது.
சுகப்பிரசவத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மழைக்கால நோய்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago