தமிழகத்தில் தேசவிரோத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவில்லை: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

By க.சக்திவேல்

கோவை: தமிழகத்தில் தேசவிரோத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவில்லை என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார்.

கோவை மாநகர், மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா தெப்பக்குள மைதானத்தில் ஞாயிறு (செப்.4) அன்று நடைபெற்றது. இதில், ஹெச்.ராஜா பேசியதாவது…

“விநாயகர் சதுர்த்தியன்று வாழ்த்து சொல்லாத நபர், அடுத்த முதல்வராக வரக்கூடாது, வரவிடமாட்டோம் என்று நாம் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். நாத்திகராக இருந்தால் கிறிஸ்துமஸூக்கும், ரம்ஜானுக்கும் அவர் வாழ்த்து சொல்லக்கூடாது. இந்து விரோத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. தேசவிரோத நடவடிக்கைகள் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்படவில்லை. தமிழக அரசால் தேசிய சக்திகளை ஒடுக்க முடியாது.

நடராஜரை இழிவாக பேசியவரை, இந்த அரசு ஏன் இதுவரை கைது செய்யவில்லை. ஆனால், இந்து விரோத அரசு, கனல் கண்ணனை கைது செய்தது. இந்து விரோதிகள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றனர். இது மாற வேண்டுமெனில், இந்து விரோத அரசாங்கம் மாற்றப்பட வேண்டும். இந்திய இறையாண்மையாக்கு எதிராக உள்ளவர்கள் தமிழகத்தில் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். மதமாற்றம் ஒரு தேசிய அபாயம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்து மதத்தில் பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.

இங்கு தீண்டாமை என்பதே கிடையாது. இந்துகளுக்கு எதிராக எல்லா விதத்திலும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கருத்து திருடர்கள். நாத்திகம் ஒன்றும் ஈவெரா கண்டுபிடித்தது அல்ல. இந்து மத கலாச்சாரம், பண்பாட்டை நாம் பாதுகாக்க வேண்டும்” என அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்