தரிசு நிலங்களை விளை நிலங்க ளாக மாற்ற விவசாயிகள், 'உழவன் செயலி' மூலம் விண்ணப்பிக்கலாம்என கடலூர் வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தரிசு நிலங்களை விளைநிலங் களாக மாற்றும் திட்டம் 2020-2021-ம்ஆண்டு அரசால் கொண்டுவரப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கடலூர் மாவட்டத் தில், இத்திட்டத்திற்காக அரசு ரூ. 69.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 555 ஹெக்டேர் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு, விளைநிலங்களாக மாற்றப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டில் கடலூர் மாவட்டத்திற்கு 1,812 ஹெக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அரசிடமி ருந்து ரூ.2.55 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்படவுள்ளது.
» 8 வழிச்சாலை திட்டத்தில் திமுகவுக்கு நெருடல்: கார்த்தி சிதம்பரம் எம்பி கருத்து
» செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் அத்துமீறல்
சாகுபடிக்கு உகந்த தரிசு மற்றும்இதர தரிசு நிலங்கள் உள்ள அனைத்து வட்டார விவசாயிகள், தாமாகவே முன்வந்து 'உழவன் செயலி' மூலம் பதிவு செய்யலாம் அல்லது விருப்பமுள்ள விவசாயி கள் தகுந்த ஆவணங்களான ஆதார், சிட்டா, அடங்கல் மற்றும்வங்கி கணக்கு நகல் ஆகியவற் றுடன், வேளாண் துறை அலுவலர்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பல்வேறு காரணங்களினால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலத்தை தரிசாக வைத்திருக்கும் விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற லாம்.
முன்னுரிமை பதிவேடு அடிப்படையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுள்ள விவசாயிகளின் நிலத்தில் உள்ள முட்புதர் மற்றும் சீமகருவேல மரம் அகற்றுதல், நிலத்தை உழுதல்,சமப்படுத்துதல் போன்ற அனைத்து உழவியல் பணிகளுக்கும், நேரடி யாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ஆய்விற்கு பிறகு பின் னேற்பு மானியம் வழங்கப்படும்.
பருவத்திற்கு ஏற்றாற்போல் விவசாயிகள் உளுந்து, தானிய வகை அல்லது எண்ணெய்வித்து பயிர்கள் என விருப்பத்திற்கு ஏற்ப பயிரிடலாம். அதற்கான விதை, உயிர்உரம், நுண்ணூட்டக்கலவை, உயிரியல் உரங்கள் போன்ற இடுபொருட்கள் மானிய விலை யில் வேளாண் விரிவாக்க மையங்களிலிருந்து வழங்கப்படும்.
ஒரு ஹெக்டேர் உளுந்து,எள், தானிய வகை பயிர்களுக்கு ரூ.13,400 மானியமாகவும், மணிலா விற்கு ரூ22,800 மானியமாகவும் வழங் கப்படுகிறது. ஒரு விவசாயி அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார். அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் பயன் பெறலாம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago