மதுரை வழியாக மைசூர் - திருவனந்தபுரம் இடையே செப்.7-ல் சிறப்பு ரயில்

By செய்திப்பிரிவு

மைசூரில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரத்துக்கு பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட நிர் வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பண்டிகைக் கால கூட்ட நெரிசலை சமாளிக்க மைசூர்-திருவனந்தபுரம் இடையே ஒரு சிறப்பு ரயிலை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி இந்த சிறப்பு ரயில் (06201) செப்டம்பர் 7-ம் தேதி மதியம் 12.15 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் திருவனந்த புரம்-மைசூர் சிறப்பு ரயில் (06202) செப்டம்பர் 8 அன்று மதியம் 12.45 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு மைசூர் சென்றடையும். இந்த ரயில்கள் மாண்டியா, கெங்கேரி, பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், ஓசூர், தருமபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டு க்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதில் ஒரு குளிர்சாதன இரண் டடுக்குப் படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்குப் படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்