கேரளா: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கேரள மாநிலம் கோவளத்தில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "தென்மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமை தாங்குவது பாராட்டுக்குரிய முயற்சி. இந்த மாநாடு அண்டை மாநிலங்கள் உடனான எங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரு நேர்மறையான அணுகுமுறையாக நான் கருதுகிறேன், அதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
"மத்தியத்தில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி" என்பது எங்கள் குறிக்கோள். 50 ஆண்டுகளுக்கு முன்பு இதை நாங்கள் முன்மொழிந்தபோது, நாங்கள் சிறுபான்மையினராக இருந்தோம். இன்று, அனைத்து மாநில அரசுகளும், பிராந்தியக் கட்சிகளும் எங்கள் முழக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. "எல்லாருக்கும் எல்லாம்" என்ற கொள்கையின் அடிப்படையில், தமிழ்நாட்டில் திராவிட மாடலை உருவாக்கி இருக்கிறோம். மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல முக்கிய நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இந்த நேரத்தில் மத்திய அமைச்சரிடம் சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்.
> ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநில அரசுகளின் நிதி சுயாட்சி பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இழப்பீட்டு காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க வேண்டும். பேரிடர் நிவாரண நிதி மற்றும் பிற நிதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
» 'சூரத்தில் மட்டும் ஆம் ஆத்மி 7 தொகுதிகளில் வெல்லும்' - கேஜ்ரிவால் விவரிக்கும் குஜராத் ‘கணக்கு’
» சிம்புவை புது ஹீரோவாக ‘மாற்றிய’ பின்புலம் - ‘வெந்து தணிந்தது காடு’ அனுபவம் பகிர்ந்த கௌதம்
> தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய உள்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்.
> பொதுவாக, மாநில அரசுகள் விமான நிலையங்களை அமைப்பதற்காக நிலங்களை மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு இலவசமாக கையகப்படுத்தி மாற்றும். இந்திய விமான நிலைய ஆணையம் இந்திய அரசு பிற்காலத்தில், சொத்துகளை மூன்றாம் தரப்பினருக்கு மாற்றினால், மாநிலம் செய்த பெரும் முதலீட்டைக் கருத்தில் கொண்டு, அதன் மதிப்பை மாநில அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மாற்றாக, நிலங்களின் மதிப்பை சிறப்பு நோக்க வாகனம் மூலம் மாநில அரசின் பங்குகளாக மாற்ற வேண்டும்.
> மாநில பயணிகள் போக்குவரத்தில் சராசரி பயண வேகத்தை அதிகரிக்க, குறிப்பிட்ட இடங்களை இணைக்கும் அதிவேக ரயில் பாதையை உருவாக்க வேண்டும்.
> மின்சார சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரம் கிடைப்பதற்கான வழிவகை செய்ய வேண்டும்.
> தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து முதல்வர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago