அறப்போர் இயக்கத்துக்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: நெடுஞ்சாலைத் துறை டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவித்த அறப்போர் இயக்கத்துக்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

கடந்த 2016-21 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களில் நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதால் அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டி அறப்போர் இயக்கம் சார்பில் முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை, தமிழக அரசின் தலைமைச் செயலர், நெடுஞ்சாலைத் துறை செயலர் ஆகியோரிடம் கடந்த ஜூலை 22 அன்று புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் அறப்போர் இயக்கம் தகவல் வெளியிட்டது. அதையடுத்து அறப்போர் இயக்க நிர்வாகிகளுக்கு எதிராக ரூ. 1.10 கோடி மான நஷ்ட ஈடு கோரி, பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால் ஆஜராகி, “எதன் அடிப்படையில் டெண்டரை ஒதுக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் அறப்போர் இயக்கம் தலையீடு செய்ய முடியாது.

ஒரு நிறுவனத்துக்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அந்த நிறுவனம் டெண்டரிலேயே பங்கேற்கவில்லை. மேலும் டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள் டெண்டரை எதிர்த்து வழக்குத் தொடரவில்லை. மலிவான விளம்பரத்துக்காகவே இந்த புகாரை அறப்போர் இயக்கம் கொடுத்துள்ளது” என வாதிட்டார்.

அதேபோல அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகசைலா, “முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான குற்றச்
சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளன. அவை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே புகார் அளிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகார்தான் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பழனிசாமிக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தில் மாற்று கருத்து என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று. அதுதான் அடிநாதம். போடப்பட்ட சாலையை மீண்டும் போடுவதற்காக ரூ.276 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி டெண்டர் வழங்கப்பட்டுள்ளது” என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்