சென்னையில் நாளை வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் முகாம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நாளை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த ஆக.1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் நாளை (செப்.4) அன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

எனவே, இந்தச் சிறப்பு முகாமை பயன்படுத்தி வாக்காளர் பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்குச்சாவடி நிலை அலுவலரை அணுகி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏற்கெனவே இணையதளம் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்தபோது படிவம் 6பி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் கைபேசி விவரங்களை வழங்கியவர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ள தேவையில்லை.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்