இக்னோ பல்கலை.யில் மேம்படுத்தப்பட்ட எம்பிஏ படிப்பு: விண்ணப்பிக்க செப்.9-ம் தேதி கடைசி

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக முதுநிலை மண்டல இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எம்பிஏபடிப்பு முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு ஏஐசிடி ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இதில் மனிதவளம், நிதி, இயக்கம், சந்தைப்படுத்துதல், சேவை ஆகியவற்றின் மேலாண்மை குறித்து கற்பிக்கப்படுகிறது. தொலைதூரம் மற்றும் இணைய வழியிலும் படிக்கலாம்.

ஏதேனும் ஒரு மூன்றாண்டு பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீட்டு பிரிவினர் 45 சதவீதம்மதிப்பெண் பெற்றால் போதுமானது. 2 முதல் 4 ஆண்டுகள் வரைபயிற்சி காலம். ஒரு பருவத்துக்கு ரூ.15,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொலைதூர முறையில் படிக்க விரும்புவோர், https://ignouadmission.samarth.edu.in என்றஇணையதளத்திலும், இணையவழியில் படிக்க விரும்புவோர் https://ignouiop.samarth.edu.in என்ற இணையதளத்திலும் செப்.9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, www.ignou.ac.in என்ற இணையதளம், rcchennai@ignou.ac.in, rcchennaiadmissions@ignou.ac.in ஆகிய மின்னஞ்சல் முகவரி, 044 2661 8040 என்ற தொலைபேசி எண் ஆகியவற்றை அணுகலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்