வாணியம்பாடியில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலத்தில் கல்வீச்சு

By செய்திப்பிரிவு

வாணியம்பாடி: வாணியம்பாடியில் விநாயகர் சிலை மீது மர்ம நபர்கள் கல்வீசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்து அமைப்புகள், பாஜக, பொதுமக்கள், தனியார் அமைப்புகள் சார்பில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து, விநாயகர் சிலை விஜர்சன ஊர்வல நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், விஜர்சன ஊர்வலங்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

வாணியம்பாடி பொன்னியம்மன் கோயில் அருகே விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நேற்று நடைபெற்றது. . வாணியம்பாடி நகராட்சி கவுன்சிலர் சாரதிகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில், பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 75-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. ஆசிரியர் நகர், காதர்பேட்டை, சி.எல்.ரோடு, கச்சேரி சாலை, கணியம்பாடி சாலை, பூக்கடை பஜார், சிவாஜி தியேட்டர் வழியாக சென்று வள்ளிப்பட்டு ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலமானது வாணியம்பாடி நீலிக்கொல்லை பெரிய மசூதி அருகே வந்த போது ஊர்வலத்தின் மீது மர்ம நபர்கள் கற்களை (செங்கல்) வீசியதாக ஊர்வலம் பாதியில் நிறுத்தப்பட்டது.

ஊர்வலத்தில் சென்ற இந்த அமைப்பினர், இளைஞர்கள் ஒன்று திரண்டு விநாயகர் விஜர்சன ஊர்வலத்தில் வீண் பிரச்சினை ஏற்படுத்த கல் வீசிய மர்ம நபர்கள் யாரென கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில், கூடுதல் எஸ்.பி., சுப்புராஜ், வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்பாண்டியன் மற்றும் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, கற்கள் வீசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அதன்பிறகே ஊர்வலம் செல்லும் என விழாக் குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக அம்பூர் பேட்டையைச் சேர்ந்த விஜய் (28) என்பவர் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து கற்கள் வீசியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித் தனர்.

அதன் பிறகு, விஜர்சன ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்த சம்பவத்தால் வாணியம்பாடியில் நடைபெற்ற விஜர்சன ஊர்வலம் 2 மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக புறப்பட்டு வள்ளிப்பட்டு ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்