தஞ்சாவூர்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர் பேட்டி அளித்துள்ளார்.
உணவு ஒவ்வாமை காரணமாக தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நலமுடன் இருக்கிறார் என மருத்துவர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
நேற்று இரவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நலம் குறித்து அவருக்கு சிசிச்சை அளித்து வரும் குடல். ஈரல் நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் பிரசன்னா கூறும்போது, “வயிற்றுவலி. வாந்தி, வயிற்றுப்போக்குடன் மருத்துவமனைக்கு வந்த தினகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட அவர் தற்போது நலமுடன் உள்ளார். பொது வார்டில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” எனக் கூறினார்.
» தொடரும் தற்கொலைகள்; நீட் விலக்கை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்
» தஞ்சாவூரில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 1,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவ அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
23 hours ago