சென்னை: தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்குவணிகர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 53 சுங்கச்சாவடிகள் உள்ளன.இவற்றில் ஏப்.1-ம் தேதி, செப்.1-ம்தேதி கட்டணம் மாற்றியமைக்கப்படும்.
கடந்த ஏப். 1-ம் தேதி 30 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், விக்கிரவாண்டி, கொடைரோடு, மனவாசி, மேட்டுப்பட்டி, மொரட்டாண்டி, நத்தக்கரை, பாளையம், வீரசோழபுரம், எலியார்பதி, பொன்னம்பலப்பட்டி உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் தற்போது 7 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, கார், ஜீப் போன்றவாகனங்களுக்கு ரூ.90-ல் இருந்து ரூ.100 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் பலமுறை சுங்கச்சாவடிகளைக் கடக்க வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.135-ல் இருந்து ரூ.150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
» விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த முன்னாள் வீரரின் உடல் உறுப்புகள் 4 பேருக்கு தானம்
» இந்திய கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் எதிரொலி - போர்ச்சுகல் அமைச்சர் ராஜினாமா
இதனால், சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர், குறிப்பாக கோவையில் இருந்து டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு சேலம் வழியாகச் செல்வோர் சுங்கச்சாவடிகளில் ரூ.100 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
20 சுங்கச்சாவடிகளில்..
முன்னதாக, கல்லக்குடி, மணகெதி சுங்கச்சாவடிகள் மே மற்றும்ஜூன் மாதங்களில் செயல்படத்தொடங்கின. இதேபோல, மணவாளநல்லூர் சுங்கச்சாவடியில் இன்னும் கட்டணம் வசூலிக்கத் தொடங்கவில்லை. இந்த 3 சுங்கச்சாவடிகளைத் தவிர்த்து, மற்ற 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி, வணிகர்களுக்கும் பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், விலைவாசி உயரும் அபாயம் உள்ளது. எனவே, கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள், வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன்:தேசிய நெடுஞ்சாலைகளும், மாநில நெடுஞ்சாலைகளும் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளன. மக்கள் நலனைப் பலியிட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் சட்டப்பூர்வ கொள்கைக்கு வழியமைத்து வரும் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். சுங்கக் கட்டண உயர்வைரத்து செய்வதுடன், விதிமீறி அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்: மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையற்ற பாஜக அரசு, கட்டண உயர்வை அனைத்து சுங்கச் சாவடிகளுக்கும் விரிவாக்கியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சுங்கக் கட்டண உயர்வால் மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாவர். எனவே, கட்டண உயர்வை திரும்பப் பெறுவதுடன், ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்துவதை கைவிட வேண்டும்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா: சுங்கச்சாவடிகள் நீக்கப்படும் என்ற நீண்டகால நம்பிக்கையை, இக்கட்டண உயர்வு தகர்த்துள்ளது. சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்.
சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர் சுங்கச்சாவடிகளில் ரூ.100 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago