போதைப் பொருட்கள் விற்பனையாளர்களின் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கம் - அமைச்சர் பொன்முடி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரிக்க மத்திய அரசுதான் காரணம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் போதைப் பொருட்களைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், என்ன நடவடிக்கை எடுத்தாலும், போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் இந்த அளவுக்கு பரவியதற்கு காரணமே மத்திய அரசுதான்.

பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில்தான் அதிக அளவில் போதைப் பொருட்கள் விற்பனையாகின்றன. குஜராத்தில் துறைமுகத்தை தனியார்மயமாக்கிவிட்டதால், வெளிநாடுகளில் இருந்து அங்கு போதைப் பொருட்கள் இறக்குமதியாகின்றன. போதைப் பொருட்கள் கடத்தலில் அங்குள்ள முந்த்ரா துறைமுகம் முதலிடத்தில் உள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் மூலம் அதிக அளவில் போதைப் பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன. இதை முழுமையாக தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைமுகங்களை தனியார்மயமாக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் எடுத்துக் கூறியும், மத்திய அரசு அதைக் கேட்கவில்லை. அதனால்தான் தமிழகத்திலும் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

அருகில் உள்ள விஜயவாடா துறைமுகத்தில் இருந்து அதிக அளவில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த நீதிபதி பவார் இதை சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் 2013 முதல் 2021 வரை ரூ.32.99 கோடி மதிப்புள்ள, 952 டன் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் ரூ.2.88 கோடி மதிப்பிலான 152.94 டன் போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளன. 2013-21 வரை ரூ.2.88 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரே ஆண்டில் ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரூ.10 கோடி சொத்துகள் முடக்கம்

போதைப் பொருட்களைத் தடுக்க முதல்வர் எடுத்த நடவடிக்யைால், கடத்தல்காரர்களின் ரூ.25.50 லட்சம் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

ஆந்திரா, தெலங்கானா, வடகிழக்கு மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு வருவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்