சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில்களில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 56 லட்சத்து 66 ஆயிரத்து 231 பேர் பயணம் செய்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் நம்பகமான, பாதுகாப்பான போக்குவரத்து வசதியை மெட்ரோரயில் நிறுவனம் அளித்து வருகிறது. மெட்ரோ ரயில்களில் தினமும் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் பயணித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரிக்கிறது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 56 லட்சத்து 66 ஆயிரத்து 231 பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, ஆகஸ்ட் மாதம் 3 லட்சத்து 48 ஆயிரத்து 572 பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக ஆகஸ்ட் 29-ம் தேதி 2 லட்சத்து 20 ஆயிரத்து 898 பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 8 மாதங்களில் 3 கோடியே 57 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 17 லட்சத்து 95 ஆயிரத்து 601 பேரும், பயண அட்டை முறையைப் பயன்படுத்தி 34 லட்சத்து 42 ஆயிரத்து 151 பேரும் பயணம் செய்துள்ளனர். க்யூஆர்குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகளைப் பயன்படுத்தி பயணிக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago