திருச்சி: சென்னையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், அங்கு வெள்ளப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும், அதை வெளியேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் குறித்து, திருப்புகழ் கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில், ரூ.935 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அனைத்து இடங்களிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சாலைக்கு அடியில் இருக்கும் புதைசாக்கடைத் திட்டக் குழாய்கள், குடிநீர் குழாய்கள், தொலைபேசி மற்றும் இணையத் தொடர்புகளுக்கான வயர்கள், மின்சார வயர்கள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள மின் கம்பங்கள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக ஒழுங்குபடுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், பணிகள் மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.
மேலும், போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற அடிப்படையிலும் பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளை விரைவுபடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நானும் நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தியுள்ளேன். முன்பை விட தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், சென்னையில் கடந்த முறை வெள்ளத்தால் அதிக அளவில் பாதித்த இடங்களில், இந்த முறை வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதிக அளவில் தண்ணீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அங்கு தண்ணீரை வெளியேற்ற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago