சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இவை சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே, இந்த மோசடி மூலமாக சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையினரும் வழக்கு் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் டி.ராஜா, குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது செந்தில்பாலாஜி தரப்பில், சென்னை குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ள மோசடி வழக்குகளின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது என்றும், அமலாக்கத்துறை கோரிய ஆவணங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது, என வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
» போதைப் பொருட்கள் விற்பனையாளர்களின் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கம் - அமைச்சர் பொன்முடி தகவல்
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago