பழநி - கொடைக்கானல் மலைச் சாலையில் மண் சரிவு: போக்குவரத்துக்கு தடை

By செய்திப்பிரிவு

பழநி - கொடைக்கானல் மலைச் சாலையில் சவரிக்காடு அருகே மண் சரிவு ஏற்பட்டு சாலை சேதமடைந்ததால் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழநி, கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் (ஆக. 31) இரவு முதல் நேற்று (செப். 1) காலை வரை மழை நீடித்தது. காலை 8 மணி நிலவரப்படி, பழநியில் 5 மி.மீ, கொடைக்கானலில் 10 மி.மீ. மழை பதிவானது.

கனமழையால் பழநி - கொடைக் கானல் மலைச் சாலையில் சவரிக்காடு அருகே மண் சரிவு ஏற்பட்டதில் சாலை சேதமடைந்தது. இதனால் பழநி - கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் செல்லும் வாகனங்களை மலையடிவாரத்தில் போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர்.

இந்த வழியாக சரக்கு வாகனங்கள் செல்ல முடியாததால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொடைக்கானல், வத்தலகுண்டு வழியாக எடுத்துச் செல்கின்றனர்.

மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்புப் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், தற்போது மணல் மூட்டைகளை அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை சீரமைக்கப்படும் வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்