மதுரை: நெல்லை கோவிலம்மாள்புரத்தில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூடம் கட்டுவதற்கு அனுமதி கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நெல்லை கோவிலம்மாள்புரத்தைச் சேர்ந்த சுவாமிதாஸ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: கோவிலம்மாள்புரத்தில் நெல்லை டயோசிஸ் தரப்பில் 21 சென்ட் இடம் வாங்கி அதில் பிரார்த்தனைக் கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கோரி நெல்லை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. பிரார்த்தனைக் கூடம் கட்டுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் புதிதாக பிரார்த்தனைக் கூடம் கட்டுவதற்கு அனுமதி வழங்க நெல்லை ஆட்சியர் மறுத்துவிட்டார். ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து பிரார்த்தனைக் கூடம் கட்ட அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''பிரார்த்தனைக் கூடம் கட்டப்படவுள்ள கோவிலம்மாள்புரம் கிராமம் குக்கிராமம். இங்கு 180 இந்துக் குடும்பங்களும், 10 கிறிஸ்தவ குடும்பங்களும் வசிக்கின்றன. பிரார்த்தனைக் கூடம் கட்டுவதற்கு அனுமதி கோரும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிலும் 75 மீட்டர் தொலைவிலும் இரண்டு இந்து கோயில்கள் உள்ளன. பிரார்த்தனைக் கூடம் கட்ட அனுமதி வழங்கினால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். இதை கருத்தில் கொண்டே மனுதாரரின் மனுவை ஆட்சியர் நிராகரித்துள்ளார்'' என்றார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago