மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டமானது மருமகளுக்கு பொருந்தாது: உயர் நீதிமன்றம்

By கி.மகாராஜன்

மதுரை: மூத்தோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தில் மாமனார், மாமியார் தொடர்ந்த வழக்கில் மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை சூர்யா நகரை சேர்ந்த காயத்ரி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'எனக்கும் சுப்பிரமணியன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு கணவரும், அவரது தந்தை அம்பிகாபதியும் எனக்கு பல்வேறு தொந்தரவுகளை அளித்து வந்தனர். அதை மறைத்து எனக்கு எதிராக மாமானாரும், மாமியாரும் சேர்ந்து முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட முதியோர் பாதுகாப்பு அலுவலரிடம் (மாவட்ட வருவாய் அலுவலர்) மனு அளித்தனர்.

அந்த மனுவை விசாரித்த முதியோர் பாதுகாப்பு அலுவலர், என்னை வீட்டை விட்டு காவல் துறை உதவியுடன் வெளியேற்றி, வீட்டை மாமனார். மாமியாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, "மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2007-ன் படி மூத்த குடிமக்களான மாமனார் மற்றும் மாமியாருக்கு மருமகள் நேரடியான உறவோ, வாரிசோ கிடையாது. எனவே, இந்தச் சட்டம் மருமகளுக்கு பொருந்தாது. எனவே, மருமகளை வீட்டை விட்டு வெளியேற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்