கிருஷ்ணகிரி அணையில் இருந்து 14,618 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் இருந்து 8 மதகுகள் வழியாக விநாடிக்கு 14618 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மாவட்டத்தில் பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஓசூர், சூளகிரி மற்றும் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு கனஅடியாக 16250 இருந்தது. இன்று (31-ம் தேதி) நீர்வரத்து சற்று குறைய தொடங்கியது.அணையின் பிரதான 8 மதகுகள் திறக்கப்பட்டு, விநாடிக்கு வந்துக் கொண்டிருந்த 14,618 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.

இதுகுறித்து ஆட்சியர் கூறியது: “கிருஷ்ணகிரி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50 49.90 அடி உள்ளது. அணைக்கு விநாடிக்கு வந்து கொண்டிருக்கும் 14618 கனஅடி தண்ணீர், முழுவதும் பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.

8 கிராமங்கள்: இதனால், பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம் சௌட்டஹள்ளி, தளிஹள்ளி உட்பட 8 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு தென்பெண்பெண்ணையாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

ஆற்றை கடக்க கூடாது: பொதுமக்கள் யாரும் தென்பெண்ணை ஆற்றை கடக்க கூடாது, கால்நடைகளை நீர்நிலை பகுதிகளுக்கு அழைத்து செல்ல கூடாது. மேலும், பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளம், குட்டைகள் பெருமளவில் நீர் நிரம்பி உள்ள காரணத்தினால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நீர்நிலைகளுக்கும், ஆற்று பகுதிகளுக்கு குளிக்கவோ, வேடிக்கை பார்க்க செல்வதை அனுமதிக்க கூடாது. கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தயார் நிலையில் 37 குழு: தொடர் மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 37 இடங்கள் ஆபத்தான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக மணல் மூட்டைகள், பாதுகாப்பு உபகரணங்கள், தீயணைப்பு துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை அலுவலர்கள் மூலமாக குழு அமைக்கப்பட்டு அனைத்து தாலுக்காவிலும் 37 குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்” என்று ஆட்சியர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்