சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான மாரியம்மன், நடராஜர் சிலைகள் மீட்பு: பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை என வல்லுநர்கள் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் உள்ள வீட்டில் 300 ஆண்டுகள் பழமையான, பலகோடி ரூபாய் மதிப்பிலான மாரியம்மன், நடராஜர் உலோக சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

சென்னை அண்ணா நகர் 5-வது பிரதான சாலையில் உள்ள ஒரு வீட்டில் பழங்கால சிலைகள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு, இப்பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

அதன்படி, கண்காணிப்பாளர் ரவி, துணை கண்காணிப்பாளர் முத்துராஜா தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு போலீஸார், அந்த வீட்டில் நேற்றுசோதனை நடத்தினர். நடராஜர், அமர்ந்த நிலையில் இருக்கும் மாரியம்மன் ஆகிய 2 சிலைகள் அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, பெற்றோர் காலத்தில்இருந்தே இந்த சிலைகள் தங்களிடம் இருப்பதாக கூறினர். ஆனால், சிலை எங்கிருந்து கிடைத்தது என்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. அவை கோயில் உற்சவர் சிலைகள் என்பது உறுதிசெய்யப்பட்டது. 2 சிலைகளையும் போலீஸார் கைப்பற்றினர்.

தொல்லியல் துறை நிபுணர் தரன் மூலம் ஆய்வு செய்ததில், அவை 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என்றும், இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்