பள்ளி வன்முறையில் ரூ.3.5 கோடி சொத்து சேதம்: உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளி வளாகத்தில் நடந்த கலவரத்தில் ரூ.3.45 கோடி மதிப்பில் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீ்ஷ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு தாக்கல் செய்து உள்ள இடைக்கால அறிக்கையில் பல்வேறு சூழல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் அவற்றை வெளியிட முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக ஊடக விசாரணை நடத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட சில மின்னணு ஊடகங்களும், சமூக ஊடகங்களும் நிபுணத்துவம் இல்லாத நபர்களை வைத்து நேர்காணல் நடத்தி விசாரணை நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

ஜிப்மர் மருத்துவ நிபுணர்கள் குழு தங்களது அறிக்கையை தாக்கல் செய்த பிறகும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர்கள் சிலர் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஒப்பிட்டு மாறுபட்ட முரண்பாடான கருத்துகளை ஊடகங்களின் வாயிலாக தெரிவித்து வருவதாக கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை

வழக்கறிஞர்களாக இருந்து கொண்டு தனியாக ஊடக விசாரணை நடத்துவது ஏற்புடையதல்ல. அதுபோன்ற வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் ஒருபோதும் தயங்காது என்பதை வழக்கறிஞர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

யூடியூப் சேனல்கள்

மாணவியின் மரணம் தொடர்பான விவகாரத்தில் நடந்த சம்பவங்களை முழுமையாக வெளியே கொண்டு வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கும், அதற்கு உறுதுணை புரியும் தமிழக அரசுக்கும் பாராட்டுக்கள்.

தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பும் சமூக ஊடகங்கள் மீதும், யூடியூப் சேனல்கள் மீதும் சிறப்பு புலனாய்வுக்குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான செய்தியை பரப்ப வேண்டுமென்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட அதுபோன்ற யூடியூப் சேனல்களை முடக்கி சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேத கணக்கீடு

கலவரத்தால் பள்ளியில் ஏற்பட்டுள்ள சேதமதிப்பு குறித்து விசாரணை அதிகாரி மதிப்பீடு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதன்படி பள்ளி வளாகத்தில் இருந்த 51 தனியார் வாகனங்கள், போலீஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கான சேதம் ரூ.95.46 லட்சம் என்றும், கம்ப்யூட்டர் உள்ளிட்ட இதர பொருட்கள் சேதம் ரூ.1.50 கோடி என்றும், பள்ளி வளாகத்தில் இருந்த மரங்களுக்கான சேதம் ரூ. 1.27 லட்சம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதுபோல சிசிடிவி கேமிராக்கள் சேதம், கதவுகள், சோலார் சிஸ்டம் போன்ற அனைத்தையும் சேர்த்து பள்ளியில் ஏற்பட்ட சேத மதிப்பீடு ரூ.3 கோடியே 45 லட்சத்து 26 ஆயிரத்து 297 ஆக கணக்கிடப்பட்டு உள்ளது.

இதுதவிர 68-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விரைந்து தாக்கல் செய்ய வேண்டும், என அறிவுறுத்தி விசாரணையை வரும் செப்.27-க்கு தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்