சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், 64 பேரும் தலா ரூ. 20 ஆயிரத்தை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் கடந்த ஜூலை 11 அன்று இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆ தரவாளர்கள் மத்தியில் தகராறு ஏற்பட்டது. அதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இருதரப்பிலும் தலா 200 பேர் மீது ராயப்பேட்டை போலீஸார் வழக்குப்ப திவு செய்தனர். குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்கள் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன்வழங்கக் கோரி இபிஎஸ் தரப்பில் மாவட்டச் செயலாளர்கள் ஆதிராஜாராம், விருகை ரவி, அசோக், தி.நகர் சத்தியநாராயணன் உள்ளிட்ட 37 பேரும், ஓபிஎஸ் தரப்பில் 27 பேரும் என மொத்தம் 64 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ரூ.20 ஆயிரம் வழங்க உத்தரவு
» பிரதமர் மோடி நாளை கேரளா வருகை
» சீன கம்யூனிஸ்ட் மாநாட்டையொட்டி பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா ஊரடங்கு தீவிரம்
இந்த வழக்குகள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து 64 பேரும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன்பாக தினமும் ஆஜராகிகையெழுத்திட வேண்டும், அனைவரும் தலா ரூ.20 ஆயிரத்தை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டுமென்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago