தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான பஞ்சப்படியை விரைந்து வழங்கிடுக: வைகோ

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான பஞ்சப்படியை விரைந்து வழங்கிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து அதிமுக அரசால் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. போக்குவரத்துக் கழகங்களின் கடன் மற்றும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி காலம் தாழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைலான ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி இறுதியாக கடந்த 24.08.2022 அன்று ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இதற்காக தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பஞ்சப்படி 2015ஆம் ஆண்டிலிருந்து தரப்படவில்லை. எனவே தொழிலாளர் தோழர்களின் சிரமங்களைப் போக்குவதற்கு ஏதுவாக பஞ்சப்படி எனும் DAவை விரைவில் அளித்திடுமாறு தமிழக அசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்