ஓசூர் குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கிய 3 குழந்தைகள் உட்பட8 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேகேப்பள்ளி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் கலைமோகன். இவரது நிலத்தில் கட்டிட வேலை செய்வதற்காக 3 குழந்தைகளுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் பேகேப்பள்ளி-பாகூர் சாலையில் உள்ள சாக்கரை ஏரி நிரம்பி தண்ணீர் கலைமோகன் கட்டிடப் பகுதியில் சூழ்ந்தது. மேலும், இரவில் பெய்த மழையால் மழை நீரும் சூழ்ந்தது.
இதில், அந்த கட்டிடத்தில் தங்கியிருந்த 3 குழந்தைகள் உட்பட 8 பேரும் வெள்ள நீரில் சிக்கிக் கொண்டு இரவு முழுவதும் தூங்க முடியாமலும், உணவு தேவைக்காக வெளியே வரமுடியாமலும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு நேற்று காலை சென்ற சிப்காட் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் உதவியுடன் கயிறு கட்டி 8 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
23 hours ago