முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு முகச் சீரமைப்பு செய்த சிறுமியிடம் நலம் விசாரித்த முதல்வர்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடிவீராபுரம் பகுதியைச் சேர்ந்த 9வயது சிறுமி டான்யா அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார்.

இதுகுறித்து, தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்ஆல்பி ஜான் வர்கீஸ் முதல்வர்ஸ்டாலின் உத்தரவின் பேரில்,முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம்முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சைக்காக தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி துறையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு, முதலுதவி சிகிச்சைகள்மற்றும் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு 10 மருத்துவ குழுக்கள் மூலம் டானியாவுக்கு கடந்த 23-ம் தேதி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவக்குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று சிறுமி சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார். மருத்துவர்களிடம் தற்போதைய உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது டானியாவின் பெற்றோர், தங்கள் மகளுக்குமுகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்