சென்னை: கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் பல லட்சம் டிஎம்சி நீர், கடலில் வீணாவதைத் தடுக்க, முக்கொம்பு முதல் அணைக்கரை வரை 10 இடங்களில் கதவணை கட்ட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கர்நாடகா நீர் தரவில்லை என்று பல்வேறு போராட்டங்கள், சட்ட ரீதியான நடவடிக்கைகள் என பல கோடி ரூபாய் செலவு செய்து வருகிறோம். இந்த நிலையில், கேரளா, கர்நாடகாவில் கடும் மழையின் காரணமாக அங்கிருந்து வந்த பல லட்சம் டிஎம்சி நீர், தமிழகத்தில் கொள்ளிடம், காவிரி வழியாகச் சென்று, வீணாக கடலில் கலந்துள்ளது. இது காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளிடத்தில் மேலணை (முக்கொம்பு) முதல் கீழணை (அணைக்கரை) வரை 10 இடங்களில் நீரை சேமிக்கும் விதமாக கதவணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே அரசிடம் டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறோம்.
முதல்வர் ஸ்டாலின், தமிழக விவசாயிகள் மீது கொண்டுள்ள அக்கறையின் காரணமாக தமிழகத்தில் முதன்முதலாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதுமே, வேளாண்மைக்கு தனி பட்ஜெட் வெளியிட்டு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். தொடர்ந்து, விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தார்.
காவிரி டெல்டா பகுதியில்
அந்த வரிசையில், காவிரி டெல்டா பகுதியில் 10 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். முதல்கட்டமாக 2022-23-ம் ஆண்டில் குறைந்தது 3 இடங்களிலாவது தடுப்பணை கட்டி, காவிரி டெல்டா பாசனப் பகுதிகளின் நீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். தானும் ஒரு டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கும் விதமாக, டெல்டா விவசாயிகளின் தேவையை அறிந்து பூர்த்தி செய்யும் முதல்வர், இந்த கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு கே.வி.இளங்கீரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
23 hours ago