பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள வடக்கலூர் வாய்க்காலை அப்பகுதி விவசாயிகள் தங்களது சொந்த செலவில் தூர் வாரி சீரமைத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் வடக்கலூர் ஏரி, அக்ரஹாரம் ஏரி என 2 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் மூலம் 800 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. ஆயிரம் விவசாயிகள் பயனடைகின்றனர்.
இந்த ஏரிகளிலிருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லும் சுமார் 4 கி.மீ. நீளம் கொண்ட வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்ததால் நாணல், சம்பு, கிணாங்கு உள்ளிட்ட பல்வேறு தாவரங்கள் வளர்ந்து வாய்க்காலை மூடிவிட்டன. இதனால் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் பெரிய இடையூறு ஏற்பட்டது.
வேப்பூர் பகுதியில் சமூக நலப்பணிகளை செய்துவரும், பாமரர் ஆட்சியியல் கூடம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களின் ஒருங்கிணைப்பில் அப்பகுதி கிராம மக்கள், இந்த வாய்க்காலை தூர் வாரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் 2 மாதங்களுக்கு முன்பு மனு அளித்தனர்.
பொதுப்பணித் துறை நீர் வள ஆதாரப்பிரிவு பொறியாளர்கள் வாய்க்காலை பார்வையிட்டு தூர் வாருவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டனர். அரசு சார்பில் தூர் வாரி செப்பனிடும் பணி தொடங்க சிறிது கால தாமதம் ஆனது. ஆனால், அதற்காக அப்பகுதி விவசாயிகள் காத்திருக்க விரும்பவில்லை. மழைக்காலம் தொடங்குவதற்குள் வாய்க்காலை தூர் வார முடிவு செய்தனர்.
வடக்கலூர், அகரம், கத்தாழை மேடு மற்றும் பழைய அரசமங்கலம் ஆகிய 4 ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒருங்கிணைந்து வாய்க்காலை தங்களது சொந்த செலவில் தூர் வார முடிவெடுத்தனர். இதற்கு ஆகும் செலவு குறித்து திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. பின்னர், அதற்கான நிதியைத் திரட்டினர்.
புதர்களில் பாம்புகள், பூச்சிகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் இருந்ததால் மனிதர்கள் இறங்கி தூர் வாருவது நல்லதல்ல என முடிவு செய்யப்பட்டது.
எனவே, பொக்லைன் இயந்திரம் வரவ ழைக்கப்பட்டது. பொதுப்பணித் துறை அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதிகாரிகளின் மேற்பார்வையில், புதர் மண்டிய காடுபோல காட்சியளித்த வாய்க்கால் தூர் வாரப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே வாய்க்கால் தூர் வாரப்பட்டதை யடுத்து, மழை பெய்தால் அதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் சாகுபடி பணிகளுக்கு உதவும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பாமரர் ஆட்சியியல் கூடம் அமைப்பு, அடுத்த கட்டமாக பெரம்பலூரில் வெள்ளாறு மற்றும் சின்னாறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் 10 ஏரிகளின் ஆயக்கட்டு பாசன பகுதிகளில் தூர்ந்துபோன மற்றும் தூர் வாரப்படாத வரத்து வாய்க்கால்களை தூர் வாரி சீரமைக்க முடிவு செய்து, அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago