வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கோயில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: அறநிலையத் துறை அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகங்கள், பல்வேறு அரசு துறைகளும் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், பருவமழையின்போது கோயில்களில் தண்ணீர்தேங்காத வகைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை காலத்தில் கோயில்களுக்கு வரும்பக்தர்கள் பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்தந்த கோயில்களின் செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

தாழ்வான பகுதிகளில் உள்ள கோயில்களை கண்டறிவது, கோயில்களில் உள்ள மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளில் தண்ணீர் தடையின்றி செல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது, கோயில் குளங்களுக்கு செல்லும் பாதைகளில் இருக்க கூடிய அடைப்புகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்