சென்னை: வங்கிகள் தங்களது தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதன்மூலம், வங்கிகள் மேலும் வளர்ச்சி அடையும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் வைர விழா கொண்டாட்டம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 7-வது மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்தியன் வங்கியின் மேலாண் இயக்குநர் சாந்திலால் ஜெயின், மாநாட்டை தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘வங்கிகளை காப்போம், தேசத்தை காப்போம்’ என்ற முழக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறுகிறது. வங்கிகள் தனியார்மயமாக்கல் என்பது இன்றைக்கு ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது.
எனினும், இந்தியாவில் இன்றைக்கு வங்கிகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. இந்தியன் வங்கி ரூ.10 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளது’’ என்றார்.
மாநாட்டில், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசியதாவது:
நாட்டில் அனைவரிடமும் பணப் பரிவர்த்தனை நடைபெறுவதற்கு வங்கிகள் மையமாக இருந்து செயல்படுகின்றன. இன்றைக்கு தொழில்நுட்பம் என்பது மிகவும்அத்தியாவசியமாக உள்ளது. எனவே, வங்கிகள் தங்களது தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதன்மூலம், வங்கிகள் மேலும் வளர்ச்சி அடையும்.
இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் வெள்ளி விழா மாநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். வைர விழா கொண்டாட்டத்தில் நான் பங்கேற்கிறேன். இதன்மூலம், இச்சங்கத்துக்கும், திமுகவுக்கும் நெருங்கிய உறவு உள்ளது.
இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
நாட்டின் பொருளாதாரம்
இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு) பொதுச் செயலாளர் ஆர்.சேகரன் பேசும்போது, ‘‘நாட்டின் பொருளாதாரத்தோடு, வங்கிகள் பின்னிப் பிணைந்துள்ளன. எனவே, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கக் கூடாது. இதற்காக, நாங்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்போம்’’ என்றார்.
வங்கிகளுக்கு வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே பணி நாளாகஇருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு பணி நேரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும். விடுமுறை நாட்களில் பணிக்கு அழைக்கக் கூடாது. வங்கிகள்இணைப்பு மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
தீர்மானங்கள் நிறைவேற்றம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். போதிய அளவு ஊழியர்களை நியமிக்க வேண்டும். பெண் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் முரளி சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் சவுமியா தத்தா, இந்தியன் வங்கி செயல் இயக்குநர்கள் இம்ரான் அமின் சித்திக், அஷ்வனி குமார், இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு) தலைவர் எஸ்.மோகன் ராஜ், அகில இந்திய இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் ராம்நாத் சுக்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago