ஒரு வாரமாக பழுதடைந்த இதய சிகிச்சை கருவி: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு, தென்மாவட்டங்களில் இருந்து அதிகளவு நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண் டும் இங்கு சுமார் 8.50 லட்சம் பேர் உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வருகின்றனர். இதில் இதய சிகிச்சைப் பிரிவில் கடந்த 2007-ம் ஆண்டு 3,131 உள்நோயாளிகள் சிகிச்சைக்கு வந்தனர்.

இந்த எண்ணிக்கை படிப் படியாக ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து 2014-ம் ஆண்டில் 6,151 ஆனது. கடந்த 2015-ம் ஆண்டில் இரு மடங்கு உயர்ந்து 14,237 நோயா ளிகள் சிகிச்சைக்கு வந்தனர். இதய சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்க மொத்தம் இரண்டு ஹார்ட் லங்ஸ் இயந்திரம் (Heart lung machine) பயன்பாட்டில் இருக்கிறது. இந்த ஹார்ட் லங்ஸ் இயந்திரம் அடிக்கடி பழுதாவதால் இதய நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சி. ஆனந்தராஜ் கூறியதாவது:

அரசு ராஜாஜி மருத்துவமனை இதய சிகிச்சை பிரிவில் நாள் ஒன்றுக்கு ஐந்துக்கும் மேற் பட்டோருக்கு பைபாஸ் (By Pass) அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டிய கட்டா யம் இருக்கிறது. அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஹார்ட் லங்ஸ் இயந்திரம் (Heart Lung Machine) இல்லாமல் செய்ய முடியாது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த இயந்திரத்தில் தற்போது ஒரு இயந்திரத்தில் Head electric circuit பழுது ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இயந்திரம் வாங்கப்பட்ட நாள் முதல் இதுபோல அடிக்கடி பழுதாகி வருகிறது.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லிருந்து 50 இதய நோயாளிகள் உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை மேற்கொள்கின்றனர். இவர்களில் குறைந்தது நான்கு பேருக்காவது அவசர நிலையில் கட்டாயம் (Open Heart Bypass Surgery) அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டி உள்ளது. இரு இயந்திரம் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையிலேயே நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. தற்போது இரண்டில் ஒரு இயந்திரம் பழுதடைந்துள்ளதால் தினமும் ஒரு அறுவை சிகிச்சை மட்டும் செய்து வருகின்றனர். இதனால் உயிருக்கு போராடி கொண்டிருப்பவர்களின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது.

மதுரையைத் தவிர அருகில் உள்ள மாவட்டங்களான சிவ கங்கை, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வசதிகள் இருந்தும் இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்படாததால் நோயாளிகள் திருநெல்வேலி, தஞ்சாவூர், அல்லது திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அல் லது காப்பீட்டு திட்டத்தில் தனி யார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தாலும், அங்கு உடனடியாக அறுவை சிகிச்சைகள் மேற் கொள் ளப்படுவதில்லை. ஏற்கெனவே அங்குள்ள நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இதனால் அரசு ராஜாஜி மருத்துவமனையை நம்பி வரும் நோயாளிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். உயிர்காக்கும் அவசர சிகிச்சை என்பதால் போர்க்கால அடிப்படையில் உடனடியாக இந்த இயந்திரத்தை சரி செய்திட வேண்டும். தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.

மருத்துவமனை டீன் எம்.ஆர். வைரமுத்து ராஜுவிடம் கேட்டபோது, அந்தக் கருவியின் மதிப்பு ரூ. 79 லட்சம். இரண்டு கருவிகள் உள்ளன. ஒன்று செயல்பாட்டில் இருப்பதால், நோயாளிகள் சிகிச்சையில் எந்த பாதிப்பும் இல்லை. பழுதடைந்த கருவி விரைவில் சரி செய்யப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்