உள்ளாட்சித் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு நீடிப்பு

By ஆர்.பாலசரவணக்குமார்

தமிழக உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு 4 வாரங்களுக்குள் தமிழக அரசும் திமுகவும் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

உள்ளாட்சித் தேர்தலில் பழங் குடியினருக்கு இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து கடந்த அக்டோபர் 4-ம் தேதி உத்தர விட்டார். தேர்தலை டிசம்பர் இறுதிக்குள் நடத்தி முடிக்கவும், குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடாத வண்ணம் தடை செய்யவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அதன் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இரண்டாவது அமர்வு நீதிபதிகள் முன்பு நேற்று நடந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாதிட்டதாவது:

உரிய வழிமுறைகளைப் பின் பற்றிதான் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணையை வெளி யிட்டுள்ளது. அதில் எந்த சட்ட விதிமீறல்களும் நடக்கவில்லை. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு அதுதொடர்பான நடவடிக்கை தொடங்கிவிட்டால் மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளுக்கேற்ப மாநில அரசு இயந்திரமும் தேர்தலுக்கு ஆயத்தமாகிவிடும்.

ஆனால், அவசர கதியில் இந்த அறிவிப்பாணை வெளியிடப் பட்டுள்ளதாகக் கூறி தேர்தலை தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். இது மாநில தேர்தல் ஆணையத் துக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரங்களுக்கு விரோத மானது. தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரரும் கோரவில்லை.

அக்டோபர் 24-ம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளில் புதிய நிர்வாகிகள் பதவியேற்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண் டிய கட்டாயம், கடமை, பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. இதையெல்லாம் தனி நீதிபதி தனது கவனத்தில் கொள்ளாமல் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட் டார். எனவே, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘‘தனி நீதிபதி எல்லாவற்றையும் பரிசீலித்துதான் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுப்படி புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டுதான் இனிமேல் தேர்தலை நடத்த முடியும்’’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்தச் சூழலில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசும் திமுக தரப்பும் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் அக்டோபர் இறு திக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க முடியாது என்பதால் அக்டோபர் 24-ம் தேதிக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு கண்டிப் பாக தனி அலுவலர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்