மதுரை: மதுரை புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தககண்காட்சியை வரும் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை ஆட்சியர் அனீஸ் சேகர் செய்திருந்தார்.
இதில் புத்தகப்பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சார்பில் சுமார் 200 ஸ்டால்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. புத்தக கண்காட்சியில் இந்த ஆண்டு குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் நிகழ்சிகளுக்கும் புத்தகப்பதிப்பாளர்களும், மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடு செய்தது.
இந்நிலையில் ஆட்சியர் அனீஸ் சேகர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘‘மதுரை மாட்ட நிர்வாகம் சார்பில் செப்டம்பர் 3ம் தேதி முதல் நடத்த இருந்த புத்தக கண்காட்சி தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது. புத்தக கண்காட்சி தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும், ’’ என்று அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago