எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்குச் செல்வதால் அதிமுகவுக்கு பின்னடைவு இல்லை: ஜெயக்குமார்

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ் அணிக்குச் செல்வதால் அதிமுகவுக்கு பின்னடைவு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து ஓபிஎஸ் அணிக்கு தாவுவதால், ஒரு பின்னடைவு என்பதும் இல்லை. பணம் பாதாளம் வரை பாயும். அதுதான் நான் சொல்ல முடியும். டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ்ஸிடமும் கோடி கோடியாய் பணம் குவிந்திருக்கிறது.

அந்த பணத்தைவைத்து இன்று ஆள்பிடிக்கும் வேலையைத்தான் செய்து கொண்டுள்ளனர். அதனுடைய முதற்கட்டமாக இன்று ஐயப்பனை பிடித்துள்ளனர். எத்தனை பேரை பிடித்தாலும், அதிமுகவை ஒன்னும் அசைக்கவே முடியாது. இதனால், அதிமுகவுக்கு எந்தவொரு பின்னடைவும் கிடையாது.

அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு இடம் இல்லை. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், கறந்த பால் மடி புகாது, கருவாடு மீனாகாது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்