சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சொற்படியே நடப்பதால், தான் வென்றபடியே இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தகைசால் தந்தையே , தன்னிகரற்ற தலைவரே, முதல்வர்களில் மூத்தவரே, கலையுலக வேந்தரே, எங்களின் உயிரே, உணர்வே, தாங்கள் வகித்த திமுக தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.
ஒவ்வொரு அடியும் - நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்.மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2018-ம் ஆண்டு ஆக.28-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். திமுக தலைவராக அவர் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 5-ம் ஆண்டு தொடங்குகிறது.
» திமுக தலைவராக பொறுப்பேற்று 5-ம் ஆண்டு தொடக்கம்: அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி
» கடலூரில் உதவி ஜெயிலரை குடும்பத்துடன் தீ வைத்து எரிக்க முயற்சி
இதனையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள திமுக மூத்த தலைவர்களும் தமிழக முன்னாள் முதல்வர்களுமான அண்ணா, கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி இன்று மரியாதை செலுத்தினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago