திருநெல்வேலி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க செப்டம்பர் 8-ம் தேதி திருநெல்வேலி வருகிறார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் செப்.8-ம் தேதி திருநெல்வேலிக்கு முதல்வர் வருகிறார். இதற்காக பாளையங்கோட்டையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
அப்போது திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை முதல்வர் தொடங்கி வைக்கிறார். அத்துடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாளையங்கோட்டையில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ள மேடை போலீஸ் நிலையம் உட்பட பல்வேறு திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
தமிழக முதல்வரின் திருநெல்வேலி வருகையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பேசிய ஆணையர், 'முதல்வர் கலந்து கொள்ளும் விழா மேடை அமையவிருக்கின்ற அரசு மருத்துவக் கல்லூரி மைதானம், அதைச் சுற்றியுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்' என அறிவுறுத்தினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
1 day ago
தமிழகம்
1 day ago
தமிழகம்
1 day ago
தமிழகம்
1 day ago