ராமேசுவரத்துக்கு 8 பேர் அகதிகளாக வருகை

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால், 2 குடும்பங்களைச் சேர்ந்த 5 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் நேற்று ராமேசுவரத்துக்கு அகதிகளாக வந்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அங்குள்ள தமிழர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அகதிகளாக தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் இலங்கையிலிருந்து படகு மூலம் வந்து ராமேசுவரம் தனுஷ்கோடி அருகே ஒன்றாம் எண் தீடையில் இறக்கி விடப்பட்டு தவித்துக் கொண்டிருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மண்டபம் ெமரைன் போலீஸார் அங்கு சென்று 8 பேரையும் படகில் மீட்டு வந்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் இலங்கை மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு இளைஞர், மூதாட்டி (65) உள்ளிட்ட 2 பெண்கள், 3 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் என 8 பேர் எனத் தெரியவந்தது. அவர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறையினர் மற்றும் போலீஸார் விசாரணைக்குப் பிறகு, அனைவரும் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்