மகிழ்ச்சியாக, குதூகலமாக இருக்க வேண்டிய ‘சொந்த ஊர் பயணம்’ என்பது சென்னைவாசிகளுக்கு பெரும் சுமையாக மாறிவருகிறது. ரயில், அரசுப் பேருந்து, சொந்த வாகனம் ஆகியவற்றில் செல்ல இயலாமல் தவிக்கும் நடுத்தர மக்களை ஆம்னி பேருந்துகளும் அதிக கட்டணம் வசூ லித்து அவதிக்கு உள்ளாக்குகின்றன. இந்த அராஜகத்தை தடுக்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பாவி பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந் தவர்களும் கல்வி, தொழில், வியா பாரம் உட்பட பல்வேறு காரணங் களுக்காக சென்னையில் தங்கியுள்ள னர். தலைநகரின் பரபரப்புக்கு இடை யில் வாழ்க்கையை நகர்த்திவரும் இவர்கள், நாலைந்து நாட்கள் தொடர்ச்சி யாக விடுமுறை கிடைத்தால் சொந்த ஊருக்கு சென்று திரும்புவதை புத்துணர்ச்சியாக கருதுகின்றனர். சென்னையில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் இருக்கிற பாண்டிச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் வரை உள்ள வர்கள் ஓரளவு தப்பித்தார்கள். திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு செல்பவர்களின் நிலை ரொம்ப திண்டாட்டமாகிவிடுகிறது.
ரயிலுக்கான முன்பதிவு தற்போது 4 மாதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் யார் யார் எப்போது புறப்பட்டு, எப்போது திரும்புவது? விடுப்பு கிடைக்குமா? என்றெல்லாம் ஜூன் மாதமே முடிவு செய்து முன்பதிவு செய்தால்தான், அக்டோபர் கடைசியில் தீபாவளிக்கு போகமுடியும். இதை யோசித்து தயாராவதற்குள், தீபாவளி முன்பதிவு தொடங்கிய சில நிமிடங் களிலேயே முடிந்துவிடுகிறது. அரசுப் போக்குவரத்து கழக விரைவுப் பேருந் துக்கு முன்பதிவு செய்வதும் ஏறக் குறைய இதே ரகம்தான். அதனால், ரயில், அரசுப் பேருந்து பயண கனவு 4 மாதங்களுக்கு முன்பே தகர்ந்துவிடுகிறது.
என்.எச். நெடுஞ்சாலையில் வழி நெடுக இருக்கும் சுங்கச்சாவடிகளில் ‘கப்பம்’ கட்டுவது, நடுத்தர குடும்பங் களுக்கு கட்டுப்படியாவதில்லை. இத னால், சொந்த கார் வைத்திருப்பவர் களும் அதில் சொந்த ஊர் செல்ல தயங்குகின்றனர்.
இதனால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல ஒரே வழி ‘ஆம்னி பேருந்து’தான் என்ற நிலை ஏற்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் பேருந்து உரிமையாளர்கள் தொடர் விடுமுறை நாட்களில் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.
சனி, ஞாயிறு, ஆயுத பூஜை, விஜய தசமி, மொகரம் என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைத்ததால், சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களாக வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்ற அரசு, ஆம்னி பேருந்துகளில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்தனர். இதைப் பயன்படுத்தி பெரும்பாலான ஆம்னி பேருந்துகளில் 50 முதல் 60 சதவீதம் வரை அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இத னால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஆதித்தமிழன், புகழ் ஆகிய பயணி கள் இதுபற்றி கூறும்போது, “சாதாரண நாட்களில் திருச்சிக்கு செல்ல ஒரு வருக்கு ரூ.300 தான் கட்டணம் கொடுப் போம். இப்போது ரூ.700 வசூலிக்கப் பட்டது. வெளிப்படையாகவே இணைய தளங்களில் அதிக கட்டணம் வெளியிட்டு வசூலிக்கிறார்கள். அதிகாரிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை என்று தெரியவில்லை” என்றனர்.
பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந் துகள்கூட நேரத்துக்கு வருவதில்லை என்றார் சிவக்குமார் என்ற பயணி. எம்.ராஜீ, இந்திரா ஆகியோர் கூறும்போது, ‘‘அரசு பேருந்து கிடைக்கவில்லை. ஆம்னி பேருந்தில் பெங்களூருக்கு ரூ.1,100 கட்டணம் என்றார் இடைத்தரகர். பேரம் பேசியதில், ரூ.1,000-க்கு ஒப்புக்கொண்டார். பணம் கொடுத்ததும் ரூ.800 என டிக்கெட் எழுதிகொடுத்துவிட்டு சென்றுவிட்டார்” என்றார்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பி.குமார் கூறும்போது, “பெருங்களத்தூரில் இருந்து திருச்சிக்கு ஆம்னி பேருந்தில் ரூ.750 கட்டணம் என்றார் இடைத்தரகர். பிறகு ரூ.600-க்கு கொடுத்தார். ‘ரூ.600 என பேருந்தில் வேறு யாரிடம் சொல் லாதீர்கள்’ என்றார். சக பயணிகளுடன் பேசும்போதுதான் அவர்கள் அதே டிக்கெட்டை ஆன்லைனில் ரூ.400-க்கு முன்பதிவு செய்தது தெரிந்தது” என்றார்.
போக்குவரத்து துணை ஆணை யரக அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்ட போது, ‘‘அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நேற்றைய சோதனை யில் 3 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளோம்.
ஒவ்வொரு முறையும் 80 முதல் 100 ஆம்னி பேருந்து களின் பர்மிட்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுகிறோம். சம்பந்தப் பட்ட பேருந்து உரிமையாளர்கள் முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து அவர்களின் பேருந்துகளை விடுவித்துச் சென்றுவிடுகின்றனர். ஆம்னி பேருந்து கட்டண நிர்ணயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடக் கிறது. போக்குவரத்து துறையில் சட்டத்திருத்தம் மேற்கொண்டு ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயித்தால் தீர்வு ஏற்படும் என்று அரசுக்கு தெரிவித்துள்ளோம்” என்றனர்.
கோயம்பேட்டில் இருந்து 750 சிறப்பு பேருந்துகள்
5 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், 7-ம் தேதி வெள்ளிக்கிழமை முதலே ஏராளமானோர் சொந்த ஊருக்கு புறப்படத் தொடங்கிவிட்டனர். 2-வது நாளாக நேற்றும் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால், கோயம்பேடு, பெருங்களத்தூர், தாம்பரம், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வடபழனி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் நேற்று மாலை 5 மணிக்குப் பிறகு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எழும்பூர், சென்டரல் ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம்பிடிக்க மக்கள் நீண்ட தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர். கோயம்பேட்டில் இருந்து நேற்று 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago