பண்ணை பசுமை கடைகளுக்கு இழப்பீட்டுத் தொகை தராததால் 2 ஆண்டாக நஷ்டத்தை சந்திக்கும் கூட்டுறவு சங்கங்கள்: ஏஐடியூசி தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

By ச.கார்த்திகேயன்

பண்ணைப் பசுமை கடைகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை கடந்த 2 ஆண்டுகளாக அரசு வழங்காததால், பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தை சந்திப்பதாக ஏஐடியூசி புகார் தெரிவித்துள்ளது.

வெளிச்சந்தையில் காய்கறி விலையை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2013- ஜூனில் பண்ணைப் பசுமை கடைகளை தமிழக அரசு திறந்தது. சென்னையில் 42 பண்ணைப் பசுமை கடைகள் உட்பட தமிழகம் முழுவதும் 72 கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த அக்டோபர் 6-ம் தேதி நிலவரப்படி 19 ஆயிரத்து 231 டன் காய்கறிகள், ரூ.55 கோடியே 48 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது, வெளியில் காய்கறிகள் விலை கிலோ ரூ.100 வரை உயர்ந்தன. அப்போது, 50-க்கும் மேற்பட்ட தற்காலிக பண்ணைப் பசுமை கடைகள் திறக்கப்பட்டன. கடைகளை நடத்துவதால் கூட் டுறவு சங்கங்களுக்கு ஏற்படும் இழப்பை கடந்த 2 ஆண்டுகளாக அரசு வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக டியூசிஎஸ் தொழிற்சங்க (ஏஐடியூசி) செய லாளர் வி.முத்தையா கூறியதாவது:

காய்கறி விற்பனையில் ஏற்படும் இழப்புகளை அரசு ஏற்கும் என்ற உத்தரவாதத்தின்பேரில்தான் இத்திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2013-14 நிதியாண்டில் 3 மாதங் களுக்கான இழப்பீடு மட்டும் உடனே அரசு வழங்கியது. மீதம் உள்ள மாதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.5 கோடி அளவில் இந்த ஆண்டுதான் அரசு வழங்கியுள்ளது. 2014-15 நிதியாண்டு முதல் தற்போது வரை ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வில்லை. அவற்றின் மதிப்பு ரூ.5 கோடிக்கு மேல் இருக்கும்.

இந்த இழப்பீடு, ஊழியர்கள் கணக்கில் வைத்து, அவர்களின் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும் அம்மா உணவகங்களுக்கு தேவையான மளிகை மற்றும் காய்கறிகளையும் டியூசிஎஸ் நிறுவனமே வழங்குகிறது. சென்னை மாநகராட்சியிடம் இருந்து டியூசிஎஸ் நிறுவனத்துக்கு ரூ.23 கோடி வரை வர வேண்டியுள்ளது. நிலைமையை சமாளிக்க டியூசிஎஸ் நிறுவனம் ரூ.15 கோடிக்குமேல் வங்கிகளில் கடன் பெற்று, வட்டி செலுத்தி வருகிறது.

அரசின் பண்ணைப் பசுமை கடைகளாலும், அம்மா உணவகத்தாலும் கூட்டுறவு சங்கங்களுக்கு நஷ்டமே ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை அரசே ஏற்றுக்கொண்டு, உரிய காலத்தில் இழப்பீடு வழங்கினால் மட்டுமே கூட்டுறவு சங்கங்கள் பிழைக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக டியூசிஎஸ் கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எங்கள் சங்கம் சார்பில் 15 பண்ணைப் பசுமை கடைகள் இயக்கப்படுகிறது. இழப்பீடு கோரி அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகையை பணியாளர்களின் கணக்கில் சேர்த்தாலும், யாருடைய ஊதியத்திலும் பிடித்தம் செய்வதில்லை. மற்ற கூட்டுறவு சங்கங்களில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்