நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில் நேரம் மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: திருநெல்வேலி - தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலின் நேரம் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இரவு 7.20 மணிக்கு புறப்படும்

திருநெல்வேலி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் (06004) இயக்கப்படுகிறது. இதில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து ஞாயிறு இரவு 7 மணிக்குப் பதிலாக,இரவு 7.20 மணிக்குப் புறப்படும். சேரன்மகாதேவிக்கு இரவு 7.41 மணிக்கும், அம்பாசமுத்திரத்துக்கு இரவு 7.58 மணிக்கும், தென்காசிக்கு இரவு 9 மணிக்கும், ராஜபாளையத்துக்கு இரவு 10.18 மணிக்கும், விருதுநகருக்கு இரவு 11.15 மணிக்கும் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரத்துக்கு வழக்கம்போல மறுநாள் காலை 9.20 மணிக்கு வந்தடையும். இந்த ரயிலின் நேரம் மாற்றம் திருநெல்வேலி-விருதுநகர் வரை மட்டும் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று (ஆக.28) முதல் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்