கரூர் புத்தகத் திருவிழா அரங்கினுள் புகுந்த மழை வெள்ளம்: புத்தகங்கள் சேதம், சேறும் சகதியுமான பாதை

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் புத்தகத் திருவிழா அரங்கினுள் மழை வெள்ளம் புகுந்ததால் ஏராளமான புத்தகங்கள் சேதமடைந்தன. அரங்கினுள் செல்லும் பாதை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் இன்று (ஆக. 27) காலை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக கரூர் திருமாநிலையூரில் அமைக்கப்பட்டுள்ள புத்தகத் திருவிழா அரங்கில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் ஏராளமான புத்தகங்கள் மழை, வெள்ள நீரில் நனைந்து நாசமாகின.

கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் தற்காலிக அரங்குகள் அமைக்கப்பட்டு கரூர் புத்தகத் திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கப்பட்டது. இதில் அமைக்கப்பட்டுள்ள 135 அரங்குகளில் 115 அரங்குகளில அரங்குகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் காவல்துறை, மாவட்ட நூலகத்துறை, வனத்துறை, இல்லம்தேடி கல்வி உள்ளிட்ட அரசின் துறைகளும் இடம் பெற்றிருந்தன. மேலும், புத்தகக் கண்காட்சி அரங்கம் அருகில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அரங்கம், தொல்லியல் அருங்காட்சியகம், கோளரங்கம், குறும்பட திரையரங்கம், உணவகம் ஆகியவை அமைக்கப்பட்டன.

நாள்தோறும் பகல் நேரத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகளும், மதிய நேரத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை நேரத்தில் பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இவற்றில் குழந்தைகள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கு பெற்றனர். நாளை மறுநாள் புத்தகத் திருவிழா நிறைவடைய உள்ள நிலையில் கரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு சுமார் 3 மணி நேரம் கனமழை பெய்தது (68 மி.மீட்டர்). இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

கனமழை பெய்யத் தொடங்கிய நிலையில் புத்தகத் திருவிழா அரங்குளில் மேற்கூரை தகரத்தில் வழியாக மழைநீர் புத்தக அரங்குகளில் சொட்டத் தொடங்கியது. இதனால் பலரும் புத்தகங்களை மேஜைகளுக்கு அடியில் எடுத்து பாதுகாப்பாக வைத்தனர். மழை நீண்ட நேரம் பெய்த நிலையில் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்த வந்த மழை வெள்ளம் புத்தகத் திருவிழா அரங்குக்கு வெளியே உள்ள மைதானத்தில் தேங்கியது.

தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் மழை வெள்ளத்தின் அளவு அதிகரித்து புத்தகத் திருவிழா அரங்குக்குள் மழை வெள்ளம் புகுந்தது. மேலும் வெள்ளம் அதிகரித்து அரங்கின் முன் பகுதயில் உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்குள் சுமார் 1 அடி உயரம் வரை வெள்ள நீர் புகுந்ததில் ஏராளமான புத்தகங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இரவு நேரம் என்பதால் மழை வெள்ளத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க முடியவில்லை. பொதுப் பணித்துறையினர் பொக்லைன் மூலம் இன்று (ஆக. 27) அதிகாலை வாய்க்கால் வெட்டி மழை வெள்ளத்தை வடிய செய்தனர். அரங்கின் முன் பாதி பகுதிகள் சேறும், சகதியுமான மாறின. இதையடுத்து பொக்லைன் நுழைவாயில் பகுதியில் எம் சாண்ட் கொட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்து வரவேண்டாம் என தகவல் அளிக்கப்பட்டது. மேலும், விடுமுறை நாள் என்பதால் புத்தகத் திருவிழாவை காண வந்த பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பணிகள் மதியத்திற்குள் நிறைவு செய்து மதியத்திற்கு மேல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனதெரிவித்தனர். மழை வெள்ளம் உள்ளே புகுந்ததால் அரங்கின் முன் பாதி பகுதியில் அமைந்திருந்த சுமார் 70 கடைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்