திருச்சி | மதிமுகவினருடன் மோதல் வழக்கில் சீமான் விடுதலை

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே 19-ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை வரவேற்பதில், 2 கட்சிதொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் சோமு உள்ளிட்டோர் தாக்கப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், சீமான் உள்ளிட்ட 14 பேர் மீது திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 6-ல் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி சிவக்குமார் நேற்று அளித்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சீமான் உள்ளிட்டோர் மீது அரசுத் தரப்பில் குற்றம் நிரூபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார். இதற்காக சீமான் உள்ளிட்ட 14 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

23 hours ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

மேலும்