‘விடுதலைப்போரில் வீரத் தமிழகம்’: ஒலி - ஒளிக்காட்சி செப்.1 வரை நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவரும் ‘விடுதலைப் போரில் வீரத் தமிழகம்’ ஒலி - ஒளிக்காட்சி, செப்.1-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட தேசத் தலைவர்களை போற்றி சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ’விடுதலைப் போரில் வீரத் தமிழகம்’ என்ற முப்பரிமாண ஒளி - ஒலிக்காட்சி ஆக.15-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கப்பட்டது. 25-ம் தேதி (நேற்று) வரை இக்கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்அதிகளவில் பார்வையிட ஏதுவாகசெப்.1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 200 ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்கள், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகள், சுதந்திரத்தின் அருமை ஆகியவற்றை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில் இந்த முப்பரிமாண ஒளி - ஒலி காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய விடுதலைக்கு வித்திட்ட ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய நிகழ்வுகளும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இக்கண்காட்சி காலை 9 முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம். அனைவரும் இந்த முப்பரிமாண ஒளி - ஒலிக் காட்சியை பார்வையிட்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்