தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜகாந்த் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுவதை ஒட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு ட்வீட் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவு செய்த ட்வீட்டில், ”என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பெற்று - துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கடைசியாக கடந்த 2021 ஜூலை மாதம் முதல்வர் ஸ்டாலின், விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்தார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், ஆ.ராசா ஆகியோர் சென்றிருந்தனர்.

அந்த சந்திப்பின்போது, முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு விஜயகாந்த் ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்