சென்னை: மக்களை சந்திக்க வேண்டும் என்ற விஜயகாந்தின் விருப்பத்தை நிறைவேற்றவே, அவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருகிறோம் என அவரது மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ரத்த தானம் செய்தனர். எம்.ஜி.ஆர். காதுகேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியை பிரேமலதா வழங்கினார். அதேபோல 70 ஆட்டோ ஓட்டுநர்கள், 70 மூத்த மன்ற நிர்வாகிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
விஜயகாந்தின் பிறந்தநாளை ஆண்டுதோறும் வறுமை ஒழிப்புதினமாக கொண்டாடி வருகிறோம். விஜயகாந்துக்கு கிடைத்த தொண்டர்களைப் போல், வேறு எந்த தலைவர்களுக்கும் கிடைத்துவிட மாட்டார்கள். இது தேமுதிகவுக்கு கிடைத்த பாக்கியம்.
» கோவை வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்ற முற்பட்டால் தொடர் உண்ணாவிரதம் - எடப்பாடி பழனிசாமி
75-வது சுதந்திர தினத்தை கொண்டாட, கட்சி அலுவலகம் செல்லவேண்டும் என்று விஜயகாந்த் சொன்னதால்தான், அவரை காரில் அழைத்து வந்தோம். எப்போதுமே மக்களை, தொண்டர்களை சந்திக்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புகிறார். ஆனால் பலர் அதை திரித்து விமர்சிக்கின்றனர்.
வயது மற்றும் தொடர்ந்து ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சற்று சோர்வாக இருக்கிறார். மற்றபடி அவர் நன்றாகவே இருக்கிறார். இன்னும் பல ஆண்டுகள் அவர் நன்றாகவே இருப்பார். வீட்டில் ஓய்வில் இருந்தாலும் எங்களை சரியான முறையில் வழி நடத்துகிறார். தனது 70-வது பிறந்தநாளையொட்டி, 25-ம் தேதி (இன்று) கட்சி அலுவலகத்துக்கு விஜயகாந்த் வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பா.பார்த்தசாரதி, அவைத் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகி கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago